பைக்கில் சென்றபோது வழிப்பறி... மிளகாய் பொடி தூவி திமுக கவுன்சிலரின் தந்தை கொலை..!

Feb 26, 2024 - 23:43
Updated: 2 years ago
0 331
பைக்கில் சென்றபோது வழிப்பறி... மிளகாய் பொடி தூவி திமுக கவுன்சிலரின் தந்தை கொலை..!

திண்டுக்கல்லில் மாநகராட்சி 25வது வார்டு திமுக உறுப்பினரின் தந்தையை மிளகாய் பொடியை தூவி மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியின் 25 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினரான இருப்பவர் சிவா. இவரது தந்தை நாகராஜ் என்ற சரவணன், பாறைப்பட்டி பகுதியில் இருந்து மக்கான் தெரு பள்ளிவாசல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மர்ம நபர்கள் நாகராஜ் மீது மிளகாய் பொடி தூவி உள்ளனர். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த நாகராஜ் செய்வதறியாது திகைத்தார். பின்னர் எழுந்து ஓட துவங்கிய போது பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் அவரை, மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களை கொண்டு ஓட ஓட சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இதனால் திண்டுக்கல் மதுரை காந்திஜி புது ரோடு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி தலைதெறிக்க ஓடினர். இந்த படுகொலை குறித்து உடனடியாக தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் திமுக கவுன்சலரின் தந்தையை மர்ம கும்ப கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User